Home One Line P2 ASTRO KASIH குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் சிறப்பானக் கற்றல் முறை

ASTRO KASIH குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் சிறப்பானக் கற்றல் முறை

772
0
SHARE
Ad
IDC Group Holdings Group CEO, Roger Heng, Astro Comms Director,Tammy Toh and PPUKM reps, Pn. Nur Yasmin Nan Rahimi & Pn Che Tom Sabri

கோலாலம்பூர் : ASTRO KASIH என்ற திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நிலையில் குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் (வார்டுகளில்) சிறப்பானக் கற்றல் முறையைக் கொண்டு வருகின்றது.

இளம் நோயாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கற்றல் பொருட்களைக் கொண்ட வண்டிகளைப் பெறவுள்ளன.

மருத்துவமனைகளில் சுகாதாரம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கோவிட்-19 தொற்றுநோய் பாதித்துள்ளது. குழந்தைகள் வார்டுகள், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்று. ஏனெனில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த வார்டுகளில் உள்ள இளம் நோயாளிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, குழந்தைகள் வார்டுகளில் உள்ள குழந்தைகளை புத்தகங்கள் அல்லது கல்விச் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்துக் கற்றலை ஊக்குவிக்க விரும்புகிறது, Astro Kasih.

Astro-Kasih-presenting-educational-cart-to-Hospital-Canselor-Tuanku-Muhriz-Universiti-Kebangsaan-Malaysia.
#TamilSchoolmychoice

வேடிக்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் கருவிகள் மற்றும் புத்தகங்களைக் கொண்ட 60 தனிப்பயனாக்கப்பட்ட வண்டிகளை, நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் மருத்துவமனைகளிடம் ஒப்படைப்பதில் Astro Kasih மகிழ்ச்சி அடைகிறது. இதன்வழி, குழந்தைகள் குணமடையும் தருவாயில் தொடர்ந்துக் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

எழுதுபொருள் தொகுப்புகள், விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு வண்டியும் கொண்டுள்ளது. இப்பொருட்களில் சிலவற்றை ஆஸ்ட்ரோ ஊழியர்கள் வழங்கி ஆதரவளித்திருப்பதோடு மட்டுமல்லாது, BookXcess மற்றும் Faber Castell போன்ற நிறுவனங்களும் நன்கொடையாக பொருட்களை வழங்கி ஆதரவளித்தனர்.

ach-educational-cart-is-furnished-with-stationery-sets-games-children’s-activity-books-and-storybooks-

இந்த திட்டத்தின் மற்றொரு ஆதரவாளரும் கூட்டாளருமான, IDC Global Holdings Sdn Bhd (Virochem), கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு வெப்பம் மற்றும் குளிர் யூவி ஒளியைக் கொண்ட நீர் வழங்கிகளை (Hot & Cold UV Light water dispenser) இலவசமாக வழங்கினர்.

Astro Kasih-ஐப் பிரதிநிதித்து தேம்மி தோ, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையான சேன்சலர் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனையின் நிர்வாகத்தைப் பிரதிநிதித்த பெருநிறுவன தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவைகளின் தலைவர், புவான் நூர் யாஸ்மின நன் ரஹிமியிடம் முதல் கல்விச் சார்ந்தப் பொருட்களைக் கொண்ட வண்டியை வழங்கினார்.

மீதமுள்ள வண்டிகள் ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான  மருத்துவமனைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும். “வார்டுகளில் உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். பள்ளியிலிருந்து விலகி இருப்பது நோயாளிகளுக்கு ஒரு கடினமான விஷயமாகும். எனவே, இப்பரிசுப் பொருட்கள் நிச்சயமாக குழந்தைகளை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருப்பதோடு, விரைவில் குணமடையவும் அவர்களை ஊக்குவிக்கும்,” என ரஹிமி கூறினார்.

“இவ்வாண்டு ஆஸ்ட்ரோ 25 வயது இளைமையுடைய நிறுவனமாக பீடுநடைப் போடுகிறது. எனவே, எங்களின் சுவாரசியமானப் பயணத்தில் ஆதரவளித்த அனைத்து மலேசியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறோம். சமூகத்திற்கு சேவைகளைச் செவ்வென வழங்கும் எங்களின் பயணத்தில் வாடிக்கையாளர்களே எங்களது கூட்டாளர்கள். இந்த அசாதாரண நேரத்தில், வார்டுகளில் குணமடைந்து வரும் குழந்தைகளிடையே மகிழ்ச்சியைப் பரப்புவதில் எங்களின் தாழ்மையான பங்களிப்பான கல்விச் சார்ந்த பொருட்களைக் கொண்ட வண்டிகள் அளப்பறிய பங்காற்றும் என்று நம்புகிறோம்” என தோ கூறினார்.

ஆஸ்ட்ரோவின் “குழந்தைகள் வார்டுடன் Astro Kasih (Astro Kasih Bersama Wad Pediatrik)” எனும் திட்டத்தின் மூலம் மலேசியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், குழந்தைகள் நிபுணத்துவம் மற்றும் அவர்கள் சார்ந்த புற்றுநோயியல் வார்டுகளில் ‘காம்பஸ் ஆஸ்ட்ரோ’ (Kampus Astro) கற்றல் முறைகள் இலவசமாக நிறுவப்படும்.

‘Yayasan Astro Kasih‘, என்பது ஆஸ்ட்ரோ மலேசியாவின் கீழ் இயங்கும் பெருநிறுவன சமூக பொறுப்பு அறக்கட்டளை ஆகும். அவர்கள் சேவையாற்றும் சமூகங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதுமையான மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை உருவாக்குவதே இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும்.