Home நாடு இலங்கை காமன்வெல்த் மாநாடு – பிரதமர் நஜிப் கலந்துகொள்வது உறுதி!

இலங்கை காமன்வெல்த் மாநாடு – பிரதமர் நஜிப் கலந்துகொள்வது உறுதி!

511
0
SHARE
Ad

rajapaseகோலாலம்பூர், அக் 24 – இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 23 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் மலேசிய சார்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெற்காசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சின் துணைச் செயலாளர் மசிஸா அகமட் கூறியதாக நேற்று ஃபிரீ மலேசியா டுடே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா தீர்மானத்தில் மலேசியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் புறக்கணிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்ட காரணத்தினால், இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்துகொள்ளக்கூடாது என்று மலேசியாவில் சில தமிழர் அமைப்புகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் பிரதமர் நஜிப் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷே(படம்) தலைமையிலான அரசாங்கம் சரியான விளக்கம் அளிக்கத் தவறியதால் காமன்வெல்த் மாநாட்டை தாம் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீவன் ஆல்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கென்யாவும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கோடி காட்டியுள்ளது.