Home அரசியல் “சீனப் பள்ளிகள் குறித்து முக்ரீஸ் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டன” – மசீச...

“சீனப் பள்ளிகள் குறித்து முக்ரீஸ் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டன” – மசீச திடீர் வக்காளத்து

568
0
SHARE
Ad

b_05chorcheeheungகோலாலம்பூர், அக் 24 – கெடா மாநிலத்தில் உள்ள சீனப்பள்ளிகள் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரை, மசீச கட்சி கடுமையாக விமர்சித்தது. ஆனால் தற்போது முக்ரிஸூக்கு ஆதரவாக அவரைத் தற்காத்துப் பேசியுள்ளார் அக்கட்சியின் உதவித் தலைவர் சோர் சீ ஹியூங்.

முக்ரிஸின் அறிக்கையை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாகவும், அவர் அந்த நோக்கத்தோடு கூறவில்லை என்றும் சோர் இன்று ஊடகங்களின் மீது பழிசுமத்தியுள்ளார்.

இன்று சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் பணிகளைப் பார்வையிட சென்ற சோர், “இவ்விவகாரம் தொடர்பாக மசீச துணைத்தலைவர் லியோ தியாங் லாய், முக்ரிஸை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். சீனப்பள்ளிகளுக்கு எதிராக முக்ரிஸ் கருத்துக் கூறவில்லை என்பது அப்போது தான் தெரிந்தது” என்று  குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“உண்மையில் முக்ரிஸ் கூறியது என்னவென்றால், கெடா மாநிலத்தில் மலாய்காரர்கள் தான் அதிகம் . யாருக்குத் தேவை அதிகமோ அவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன் என்று தான் அவர் தெரிவித்துள்ளார்” என்று சோர் விளக்கமளித்தார்.

கெடா மாநிலத்தில் உள்ள சீனப்பள்ளிகளின் எந்த ஒரு கோரிக்கையையும், மாநில அரசாங்கம் ஏற்காது என்று முக்ரிஸ் கூறியதாக அண்மையில் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.