கோலாலம்பூர், அக் 25 – PKFZ (Port Klang Free Zone) என்ற திட்டத்தில் பல பில்லியன் ரிங்கிட் மதிப்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று லிங்கை குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் மசீச தலைவராக இருந்த லிங் (வயது 70) மீது PKFZ திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒரு சதுர அடி 25 ரிங்கிட் என்ற கணக்கில் RM1,088,456,000 என்று சொத்து மதிப்பீடு மற்றும் சேவைத் துறையால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது தெரிந்தும், அதன் விலையில் ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் கூடுதல் வட்டி விதிக்கப்பட்ட தகவலை அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதன் காரணமாக அரசாங்கம் அந்நிலத்தை வாங்குவதற்கு 720 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.