கோலாலம்பூர், அக் 25 – 2014 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
கையில் கறுப்பு நிற பை ஒன்றை ஏந்தியபடி, ஆரஞ்சு நிறத்திலான இஸ்லாம் பாரம்பரிய உடையணிந்து புன்சிரிப்புடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
அவருடன் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி முகமட் ஹனாட்ஸ்லாவும் வந்தார்.
பொருட்கள் மற்றும் சேவை வரி
வரும் 2015 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவை வரி 6 சதவிகிதமாக இருக்கும் என்று நஜிப் அறிவித்தார்.
இது ஏற்கனவே பல தரப்புக்களும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த 7 சதவிகிதம் என்ற கணக்கை விட குறைவு ஆகும்.
வரும் 2015 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி இந்த பொருட்கள் மற்றும் சேவை வரி அதிகாரப்பூர்வ அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வருமான வரி 10 சதவிகிதம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அதிக அளவிலான மலேசியக் குடும்பங்களுக்கு வருமான வரியை செலுத்தும் அளவிற்கு வருமானம் கிடைப்பதில்லை என்று பக்காத்தான் குற்றம் சாட்டியது.
நிதி ஒதுக்கீடு
2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கருப்பொருள் “பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதும், உருமாற்றத்தை செயல்படுத்துவதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும்” ஆகும்.
அதன் படி, அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு – 264.2 பில்லியன் ரிங்கிட்
செயல்பாட்டு நிதி– 217.7 பில்லியன் ரிங்கிட்
மேம்பாட்டிற்கான நிதி – 146.5 பில்லியன் ரிங்கிட்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2014 – 4.5% – 5.5%.
2013 – 4.5%- 5.5%.
2012 – 4.5% – 5.0%.
வருமானம்:
2014 – 224.1 பில்லியன் ரிங்கிட்
2013 – 220.1 பில்லியன் ரிங்கிட்
2012 – 206.2 பில்லியன் ரிங்கிட்
பற்றாக்குறை:
2014 – ஜிடிபி ல் இருந்து 3.5%.
2013 – ஜிடிபி ல் இருந்து 4.0%.
2012 – ஜிடிபி ல் இருந்து 4.5%.