Home நாடு “புதிய வரி விதிப்பு மூலம் அரசாங்கம் மக்களை தண்டிக்கிறது” – அன்வார் கருத்து

“புதிய வரி விதிப்பு மூலம் அரசாங்கம் மக்களை தண்டிக்கிறது” – அன்வார் கருத்து

661
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01கோலாலம்பூர், அக் 26 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கினால் நேற்று அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான நாட்டின் நிதி ஒதுக்கீட்டு அறிக்கையின் ஒருபகுதியாக பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தியிருப்பது “மக்களை தண்டிப்பது” போன்றது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையை நஜிப் அறிவித்ததும் அதற்கு உடனடியாக எதிர்கட்சிகளிடமிருந்து இப்படி ஒரு விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டில் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாட்டை இந்த நிதிநிலை அறிக்கை மேலும் வளர்க்கும் என்றும், அதற்காக பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) க்கு எதிராக பக்காத்தான் போராடும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அத்துடன், அடிப்படை பிரச்சனைகளையும், நல்ல நிர்வாகம் குறித்தும் இந்த நிதி அறிக்கை அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டது பற்றி கடும் வாதங்கள் நடந்து வருகின்றன. நல்ல நிர்வாகத்தை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தவில்லை. பணக்கார நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டும், சிறப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொது வரியால் மலேசியாவில் வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்படும்” என்று அன்வார் கூறியுள்ளார்.

வரும் 2015 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) 6 சதவிகிதமாக இருக்கும் என்று நேற்று நஜிப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.