தேர்தலில் மா சியூ கியோங் 1086 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெங் சாங் இயோ 577 வாக்குகளும் பெற்றனர்.
கெராக்கான் கட்சியின் துணைத்தலைவராக கெடா மாநில கெராக்கான் தலைவர் டாக்டர் சியா சூன் ஹாய் 1,113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சியா சூனை எதிர்த்துப் போட்டியிட்ட மா வோய் சி 545 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அதே நேரத்தில் கட்சியின் உதவித்தலைவர்களாக கோசீ (1,226 வாக்குகள்), எ.கோகிலன் பிள்ளை (1,144 வாக்குகள்) மற்றும் அசாருதின் அகமட் (1,104 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.