Home தொழில் நுட்பம் “செல்லினம்” – ஆண்டிராய்டு பதிப்பு 50,000 பயனர்களைத் தாண்டி சாதனை!

“செல்லினம்” – ஆண்டிராய்டு பதிப்பு 50,000 பயனர்களைத் தாண்டி சாதனை!

1521
0
SHARE
Ad

sellinam logo 1அக்டோபர் 28 – திறன்பேசிகளில் (smart phones) தமிழ் உள்ளீட்டு முறைமையை அறிமுகப் படுத்திய செல்லினம் எனும் செயலி, ஆண்டிராய்டு (android) வகைக் கருவிகளில் 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.

2003ஆம் ஆண்டு மலேசியாவில் கணினி மென்பொருள் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிங்கப்பூர் ஒலி 96.8 தமிழ் வானொலி நிலையத்தின் ஆதரவோடு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பொதுப் பயனீட்டிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்திய வைரமுத்து, “நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினிதமிழ்” எனும் கவிதை வரிகளைக் கொண்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தொடக்கத்தில் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் கருவிகளில் மட்டும் இயங்கிய செல்லினம் 2009 ஆண்டு முதல் ஐபோனிலும் வெளியிடப்பட்டது. ஐபோனிலும் ஐபேடிலும் இதுவரை 25,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், கடந்த 2012 டிசம்பரில் செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பு வெளியீடு கண்டது. வெளியிடப்பட்ட 10 மாதங்களுக்குள் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பயனர்களின் தன்னார்வ அடிப்படையிலும், கருத்துப் பரிமாற்றங்களின் வழியும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கண்டு சாதனை படைத்துள்ளது.

முத்து நெடுமாறனின் கருத்துmuthu-nedumaran

இது குறித்து முத்து நெடுமாறன் கருத்துரைக்கையில், “செல்லினத்தைப் பயன்படுத்த ஆண்டிராய்டு பயனர்கள் காட்டும் ஆர்வம் உண்மையிலேயே உற்சாகத்தை அளிக்கிறது. திறன்பேசி வகைகளில் ஆண்டிராய்டு அதிகப் பயனர்களைக் கொண்டிருந்தாலும் அதில் நேரடி தமிழ் உள்ளீடு இயல்பாகவே இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை செல்லினம் நீக்குவது மட்டுமின்றி முன்கூறும் (prediction) வசதிகளைச் சேர்த்து தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்தியும் இனிமைப் படுத்தியும் உள்ளது. இந்த வசதிகளை அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதை கூகல் பிளே (Google Play) தளத்தில் பயனர்கள் பதிவு செய்த கருத்துகளைக் கொண்டு அறிந்துகொண்டோம்” என்று கூறினார்.

செல்லினத்தின் கூறுகள் எச். டி. சி. வகை திறன்பேசிக் கருவிகளிலும் அண்மையில் வெளியீடு கண்ட ஆப்பிளின் ஐ. ஓ.எஸ். 7 மென்பொருள் பதிப்பிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

unnamedஅடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில்

செல்லினத்தின், மேலும் சில  வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிகை (version) தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

அது குறித்துக் கருத்துரைத்த முத்து நெடுமாறன் “செல்லினத்தின் அடுத்த பதிகையை சில பயனர்கள் பயன்படுத்தி அவர்களின் விரிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பொருத்தமான கருத்துகளை ஏற்று அவற்றுக்கேற்ற மாற்றங்களை இப்போது செய்து வருகிறோம். குறிப்பாக சொற்பிழை தவிர்த்தல், அதிகமான சொல்லை முன்கூறுதல் போன்ற வசதிகள் பலரின் பாராட்டைப் பெற்று வருகின்றன. இவை அனைத்தும் பிழையின்றி இயங்கும் நிலையை அடைந்தபின் புதிய பதிப்பை வெளியிடுவோம்” என்று கூறினார்.