Home நாடு “எல்லா குற்றச்செயல்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது பழியைப் போடாதீர்கள்” – சாஹிட்

“எல்லா குற்றச்செயல்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது பழியைப் போடாதீர்கள்” – சாஹிட்

525
0
SHARE
Ad

200705311கோலாலம்பூர், அக் 30 – நாட்டில் நடக்கும் எல்லா குற்றச்செயல்களுக்கும் வெளிநாட்டினர் மீது பழியைப் போடாதீர்கள் என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு இங்கு வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தான் காரணமா என்று நாடாளுமன்றத்தில் இன்று ஜசெக புக்கிட் பிந்தாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லுன் (படம்) எழுப்பிய கேள்விக்கு சாஹிட் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களுக்குக் காரணமானவர்களில் 10 முதல் 15 சதவிகிதத்தினரே வெளிநாட்டு தொழிலாளர்கள் என்றும், பெரும்பாலான குற்றங்களுக்கு மலேசியர்கள் தான் காரணம் என்றும் சாஹிட் ஹமீடி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நாட்டில் மொத்தம் 2.1 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர் என்றும் சாஹிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.