கோலாலம்பூர், அக் 30 – உலகின் மிகப் பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை சாங்சங் அடையவும், அந்தப் பெயரை தொடர்ந்து தக்க வைக்கவும் போராடி வருகின்றது. காரணம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் செல்பேசிகளையும், கையடக்கக் கணினிகளையும் சாம்சங் விற்பனை செய்கிறது என்று அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் டேவிட் இயன் அறிவித்துள்ளார்.
இது குறித்து டேவிட் மேலும் கூறுகையில், “40 சதவிகித மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக பல சாம்சங் கருவிகளும், திரைகளும் இணைந்து செயல்படுகின்றன. உலக மக்களை உள்ளடக்கம் (Content), சேவைகள், செயலிகள் (apps) மற்றும் விளம்பரங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் இணைத்த பெருமை சாம்சங்கை சேரும் என்று நம்புகின்றோம். சாம்சங் இந்த உலகில் தனது ராஜ்ஜியத்தை தொடரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. காரணம் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காகவே மிகப் பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.