Home இந்தியா காங்கிரஸின் அறிவிப்புக்கு கருணாநிதி எச்சரிக்கை!

காங்கிரஸின் அறிவிப்புக்கு கருணாநிதி எச்சரிக்கை!

509
0
SHARE
Ad

karuna_1375724f

சென்னை, அக் 31- இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள கூடாது. தமிழ் உணர்வு கொண்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி அவர் அந்த மாநாட்டில் பங்கேற்றால், அதற்கான விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க நேரிடும். தமிழ் மக்களின் உணர்வுகளை மீறி, ஒரு துரும்பு கூட இலங்கைக்கு செல்ல கூடாது” என கருணாநிதி கூறினார்.