Home கலை உலகம் சிம்பு ஹன்சிகா நிஜ காதல் படமாகிறது

சிம்பு ஹன்சிகா நிஜ காதல் படமாகிறது

505
0
SHARE
Ad

Hansika Simbu Latest Movie Vallu Movie Stills (1)

சென்னை, அக் 31- சிம்பு, ஹன்சிகாவின் நிஜ காதல் காட்சிகள் படமாகிறது. சிம்பு, ஹன்சிகா தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதைக்கேட்டு பல நடிகர்கள் திகைத்து போனார்கள். இதற்கிடையில் சிம்புவுடனான காதலை முறிக்க சில நடிகைகள் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்ரன் ஒருபுறம் ஹன்சிகாவுக்கு காதல் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருக்கிறார். மறு புறம் நயன்தாராவின் நாசுக்கான பேச்சும் ஹன்சிகாவின் மனதை குழப்புகிறதாம்.

இதையெல்லாம் மீறி சிம்பு ஹன்சிகா காதல் வளர்ந்து வருகிறது. இருவரும் வெவ்வேறு படபிடிப்பில் இருந்தாலும் ஓய்வு நேரங்களில் மணிக்கணக்கில் செல்பேசியில் காதல் வளர்த்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதையே மையமாக வைத்து சிம்பு, ஹன்சிகாவுக்காக காதல் கதை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அவரது அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார். இதில் தனது காதலியுடன் ஹீரோ செல்பேசியில் பேசி காதல் வளர்ப்பதை படமாக உருவாக்க உள்ளார் இயக்குனர். அந்த காட்சிகள் அனைத்தும் சிம்பு, ஹன்சிகாவின் நிஜ காதலில் நடந்தவை என்பது குறிப்பிடதக்கது.