Home கலை உலகம் ஹன்சிகாவைப் பற்றி கிசுகிசு பரப்புவது சிம்புதான் – ஹன்சிகாவின் அம்மா

ஹன்சிகாவைப் பற்றி கிசுகிசு பரப்புவது சிம்புதான் – ஹன்சிகாவின் அம்மா

676
0
SHARE
Ad

MINOLTA DIGITAL CAMERAசென்னை, மே 2 – நயன்தாராவுடனான சிம்புவின் காதல் முறிந்தபோது, அவருடன் சிம்பு நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது சிம்புவின் வேலை தான் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு அதே போன்ற சில சில்மிஷங்களை சிம்பு செய்வதாக கூறப்படுகிறது. சிம்பு – ஹன்சிகா காதல் முறிந்த பிறகு, ஹன்சிகா வாலு படத்தில் நடிக்க மறுத்து பிறகு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலையீட்டால், தன்னுடைய போஷனை நடித்துக்கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில், சித்தார்த் என்ற புதுமுக நடிகருடன் ஹன்சிகா காதல் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இது மட்டும் இன்றி, நடிகை ஜெயபிரதாவின் மகனான சித்தார்த்திடம் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகவும், அதனால் தான் அவரை ஹன்சிகா காதலிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

#TamilSchoolmychoice

இந்த செய்திகளினால் கடுப்பான ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி, இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சிம்பு தான் என்று கூறியுள்ள அவர், மும்பையில் எங்களிடம் இல்லாத சொத்தா, நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம் தான், என்றும் கூறியிருக்கிறார்.