Home கலை உலகம் அஜீத்துக்கு வில்லியாக நடிக்கவில்லை – தன்ஷிகா

அஜீத்துக்கு வில்லியாக நடிக்கவில்லை – தன்ஷிகா

955
0
SHARE
Ad

Dhanshikaசென்னை, மே 2 – அரவான், பரதேசி, பேராண்மை, யா யா  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக தன்ஷிகா நடிப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த தன்ஷிகா, அஜீத்துக்கு வில்லியாக நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, கதிரவன் இயக்கும் விழித்திரு படத்தில் கிருஷ்ணா, விதார்த்துடனும், கல்யாண் இயக்கும் காத்தாடி, முத்து இயக்கும் திறந்திடு சீசே ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.

அஜீத் படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் உண்மையில்லை. அஜீத்துக்கு எதிரியாக நடிக்கவில்லை என்றார் தன்ஷிகா.