Home இந்தியா குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் இறுதிச்சடங்கு இன்று குண்டூரில் நடக்கிறது!

குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் இறுதிச்சடங்கு இன்று குண்டூரில் நடக்கிறது!

486
0
SHARE
Ad

suvaathiசென்னை, மே 2 – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் பலியானார்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 14 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஸ்வாதியின் உடல் பிரதேச பரிசோதனைக்கு பின் நேற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுவாதிக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், இன்று அவரது சொந்த ஊரான குண்டூரில் இறுதிச்சடங்கு நடக்கிறது எனவும் அவரது உறவினர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice