Home இந்தியா சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – ஜெயலலிதா

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – ஜெயலலிதா

664
0
SHARE
Ad

jayalalitaசென்னை, மே 3 – சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல் துறையினர் கடந்த 34 மாதங்களாக எடுத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட போலீஸ் பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு தமிழக காவல் துறை கைது செய்துள்ளது.

நான்கு நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயம் அடைந்தனர்.

பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் புறப்பட்ட இடத்தில் இருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பபட்டு வருகின்றன.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் உள்துறை செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின் உதவியைக் கோருவதாகத் தெரிவித்தார். அதே சமயம், தேசிய பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.