புதுடெல்லி, மே 3 – நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் நரேந்திர மோடி தலமையிலான அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, நான் கட்சியின் தலைவராக இருக்கிறேன். தனக்கான பணிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. நான் கட்சித்தலைவராக இல்லாத போது அமைச்சராக இருந்திருக்கிறேன்.
பா.ஜ.க.வில் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் நிறைய இருக்கிறார்கள். என்று ராஜ்நாத் கூறினார். மேலும், பாரதீய ஜனதா வெற்றி பெற்றால் அரசை வழிநடத்த நரேந்திரமோடிக்கு தான் தார்மீக உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.