அமேசான் திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி தொழில்நுட்ப வலைத்தளங்கள் கூறியிருப்பதாவது:-
“இந்த திறன்பேசிகளானது 4.7 அங்குல அளவுடையதும், 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்ட முப்பரிமாணத் தொடுதிரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திறன்பேசியானது 2 GB முதன்மை நினைவகம் (RAM) மற்றும் Snapdragon quad-core செயலி (Processor) ஆகியவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளன.
ஆண்டிராய்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘அமேசான் ஃபயர்’ (Amazon Fire) இயங்குதளத்தில் இந்த திறன்பேசிகள் இயங்க உள்ளதாக கூறப்படுகின்றது.