Home கலை உலகம் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 59-வது பிறந்தநாள்

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 59-வது பிறந்தநாள்

440
0
SHARE
Ad

27aafe80-c19f-4932-8674-f0fb05f2d095_original_image_500_500

சென்னை, நவம்பர் 7- உலக நாயகனான நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 59-வது பிறந்தநாள்.

பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள் அனைவரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கமலின் பிறந்தநாளை அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு அவரின் ரசிகர்கள் முக புத்தகத்திலும் வலைதளங்களிலும் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமலின் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘விஸ்வரூபம்’ படத்தின் முடிவில் ‘விரைவில் விஸ்வரூபம் 2’ என்று முடிந்திருந்தார் நடிகர் மற்றும் இயக்குநர் கமல்ஹாசன். கமலின் பிறந்த நாளன்று ‘விஸ்வரூபம் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.