Home தொழில் நுட்பம் சாம்சங் கேலக்ஸி வின் திறன்பேசி அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி வின் திறன்பேசி அறிமுகம்

661
0
SHARE
Ad

Samsung-Galaxy-Win

நவம்பர் 8- சாம்சங் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி வின் (Samsung Galaxy Win) எனும் திறன்பேசியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

4.8 அங்குல அளவு மற்றும் 800 x 480 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய WVGA தொடுதிரையினைக் கொண்டுள்ள இத்திறன்பேசியில் 1.4GHz வேகத்தில் செயலாற்றும் செயலி, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியன காணப்படுகின்றன.

#TamilSchoolmychoice

மேலும் 8GB சேமிப்பு கொள்ளளவினை கொண்டுள்ளதுடன் மைக்ரோ எஸ்டி (microSD) கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

152 கிராம்களே நிறையுடைய இத்திறன்பேசியின் விலை ரிம1655 ஆகும்.