Home இந்தியா சோனியா மற்றும் மோடி உயிருக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி?

சோனியா மற்றும் மோடி உயிருக்கு மாவோயிஸ்ட்டுகள் குறி?

500
0
SHARE
Ad

Narendra-Modi-Sonia-Gandhi

சத்தீஸ்கர், நவம்பர் 7- சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில், 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக சத்தீஸ்கர் வரும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரை குறிவைத்து இந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வைக்கப்பட்டனவா என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மற்றும் அதனையடுத்துள் பகுதிகளில் தலா 25 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல் கொண்டாகன், கண்கர் ஆகிய இடங்களில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகளையும் கண்டுபிடித்த காவல் அதிகாரிகள் அவற்றை செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வெடிகுண்டுகள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் தான் சோனியாவும், மோடியும் தனித்தனியாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அங்கு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி மற்றும் சோனியாவை குறிவைத்து மவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து இரு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் தீவிர ஏற்பாடு செய்துவருகின்றனர்.