லண்டன், நவ 7 – மகாத்மா காந்தியடிகள் புனே சிறையில் பயன்படுத்திய ராட்டை, லண்டனில் £1,10,000 பிரிட்டிஸ் பவுண்டிற்கு ( 176869 டாலருக்கு) ஏலம் விடப்பட்டுள்ளது. காந்தியடிகள், சுதந்திர போராட்ட காலத்தில், சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படி, தொண்டர்களிடம் வலியுறுத்தி வந்தார்.
இதன் ஒரு பகுதியாக, பருத்தி ஆடைகளை பயன்படுத்துவதற்காக, அவர், ராட்டையை இயக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, அவர் புனேயில் உள்ள, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர், எளிதில் கொண்டு செல்லக் கூடிய வகையில், மடக்கும் வகையிலான ராட்டையை பயன்படுத்தினார். இந்த ராட்டையை, பின்நாளில், அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர், பிளாய்டுக்கு அன்பளிக்காக கொடுத்தார்.
இந்த ராட்டை, லண்டனில், உள்ள, ‘முல்லக்’ ஏல நிறுவனத்தால் அண்மையில் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.