Home இந்தியா வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: மோடிக்கு சோனியா கடிதம்!

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: மோடிக்கு சோனியா கடிதம்!

518
0
SHARE
Ad

sonia-gandhiபுதுடில்லி, ஜூன் 4 – ஆந்திரா சீமாந்திரா பகுதிக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை, உங்கள் அரசு நிறைவேற்ற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, மோடிக்கு, சோனியா எழுதியுள்ள கடிதம், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம், 2014-ன் படி, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

அப்போது, சீமாந்திரா பகுதிக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவது, போலாவரம் பல்நோக்கு பாசன திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் முதலீடுகள் தொடர்பாக, பல வாக்குறுதிகளை, மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கியது.

#TamilSchoolmychoice

இந்த வாக்குறுதிகள் அனைத்தையும், உங்களின் பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும்,காங்கிரஸ் வழங்கும்.

போலாவரம் திட்டம் மற்றும் சீமாந்திரா பகுதிக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, பல பணிகளை ஏற்கனவே மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மேற்கொண்டது.

அந்தப் பணிகளை, உங்கள் அரசும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என, நம்புகிறேன். மன்மோகன் சிங் அரசு அளித்த, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என, எதிர்பார்க்கிறேன்.

இது மட்டுமின்றி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயும், 2014 பிப்ரவரி, 20-ஆம் தேதி, ராஜ்யசபாவில் சில உறுதிமொழிகளை அளித்துள்ளனர்.

அவை தொடர்பாக, மத்திய அமைச்சரவையும் சில முடிவுகளை எடுத்துள்ளது. அவையும் அமல்படுத்தப்பட வேண்டும்” என  கடிதத்தில் சோனியா தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே அளித்த வாக்குறுதிகளின் விவரங்களையும், கடிதத்துடன், பிரதமர் மோடிக்கு, சோனியா அனுப்பி வைத்துள்ளார்.