Home தொழில் நுட்பம் மலேசியாவில் சாம்சுங் கேலக்ஸி ஏ7 அறிமுகம்!

மலேசியாவில் சாம்சுங் கேலக்ஸி ஏ7 அறிமுகம்!

688
0
SHARE
Ad

Samsung-Galaxy-A71கோலாலம்பூர், ஜனவரி 12 – ஐபோன் 6 மற்றும் சியாவுமி திறன்பேசிகள் ஏற்படுத்திய வர்த்தக பாதிப்புகளில் இருந்து மீள முயற்சித்து வரும் சாம்சுங், பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கேலக்ஸி ஏ7 திறன்பேசிகளை கடந்த வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மலேசியாவில் நேற்று கேலக்ஸி ஏ3 மற்றும் ஏ5 திறன்பேசிகள் வர்த்தக ரீதியாக வெளியிடப்ப்பட்டன. அப்போது, அவற்றுடன் சாம்சுங் பிரியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேலக்ஸி ஏ7 திறன்பேசிகளும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

samsung galaxy a7எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் ஏ7 திறன்பேசிகள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களைக் கவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்களையும் பல்வேறு செயலிகளையும் கொண்டுள்ள கேலக்ஸி ஏ7, பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை ஏற்படுத்தும் என சாம்சுங் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கேலக்ஸி ஏ7-ன் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி கூறப்படுவதாவது:- “இதுவரை வெளிவந்துள்ள சாம்சுங் திறன்பேசிகளிலேயே மிகவும் மெலிதான திறன்பேசி, ஏ7-ஆகத் தான் இருக்கும்”.

“Qualcomm’s 64-bit Snapdragon 615 processor திறன்பேசிகளின் செயல்திறனை அதிகப்படுத்தும். உள்ளமைக்கப்பட்ட நினைவகம் 16ஜிபி அளவிற்கு இருப்பதால், பயனர்களின் தகவல் சேமிப்பு போதுமானதாக இருக்கும்” என்று கூறப்படுகின்றது.

samsung-galaxy-alpha-a7நவீன அம்சங்கள் மட்டுமல்லாமல், கண்கவரும் வடிவமைப்பும் வாங்குபவர்களுக்கு நிறைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அடுத்த மாதம், விற்பனைக்கு வர இருப்பதால், அதன் விலை நிலவரம் பற்றி சாம்சுங் இதுவரை அறிவிக்கவில்லை.

தற்போதைய நிலையில், சாம்சுங் நிறுவனம் வர்த்தக ரீதியாக மீண்டு வருவதற்கான ஒரே துருப்புச் சீட்டு இந்த கேலக்ஸி ஏ7 என்பதால், பயனர்களைக் கவர்வதற்கு சாம்சுங் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.