கோலாலம்பூர், ஜனவரி 12 – தலைநகரில் நேற்று முன்தினம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில், கமல், சூர்யா, விக்ரம் என முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க இந்தியக் கலைஞர்களுடன், மலேசியக் கலைஞர்களும் இணைந்து ஆடல், பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

மேலும், இவ்விழாவில் மலேசியாவின் மூத்த கலைஞரான டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும், ‘மைந்தன்’ இயக்குநர், நடிகர் சிகே குமரேசன், நடிகர் பி.டி.சாமி, இயக்குநர் தேவராணி உள்ளிட்டவர்களுக்கு சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.