ஜகார்த்தா, ஜனவரி 13 – நேற்று ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்போடு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதனுடைய படங்களை கீழே காணலாம்:
மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி பாதுகாப்பாக பெட்டிக்குள் இருந்து எடுக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டிக்கு மாற்றப்படுகின்றது.கறுப்புப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அறியப்பட்டால் விமானம் விபத்திற்குள்ளான காரணம் கண்டறியப்பட்டுவிடும்.பத்தியாளர் சந்திப்பில் தேடுதல் பிரிவின் இயக்குநர் சூரியாடி சுப்ரியாடி மற்றும் கடற்படை அதிகாரிகள்.