ஜகார்த்தா – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான் காரணம் என்று இந்தோனேசிய விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ளது.
விமானத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் கணிப்பொறியில் உள்ள இணைப்பு ஒன்று உடைந்ததோடு, விபத்திற்குள்ளான அன்று விமானத்தில் அது 4 முறையும், அதற்கு முந்தைய ஆண்டில் 23 முறையும் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“விமானப் பணியாளர்களின் நடவடிக்கையால் விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. இதனால் அது இயல்பான விமான இயக்கத்தில் இருந்து விலகி நீண்ட நிறுத்த நிலைக்கு மாறியுள்ளது. அந்நிலை விமானப் பணியாளர்களால் சரி செய்ய இயலாத ஒரு நிலை” என்று தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த ஏர் ஆசியா விமானம் QZ8501, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. இவ்விபத்தில் அதில் பயணம் செய்த 162 பயணிகளும் உயிரிழந்தனர்.