Home Featured உலகம் ஜப்பானில் பிணங்களோடு கரை ஒதுங்கும் மர்மப் படகுகள்!

ஜப்பானில் பிணங்களோடு கரை ஒதுங்கும் மர்மப் படகுகள்!

523
0
SHARE
Ad

Japan boatsடோக்கியோ – அழுகிய பிணங்களோடு ஜப்பான் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மர்மப் படகுகளால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

அப்படகுகள் எங்கிருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்குகின்றன? அதில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் மர்மம் நீடித்து வருகின்றது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இப்போது வரை சுமார் 8 மரப்படகுகள் அவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன. அவற்றில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையிலும், தலை இல்லாமலும், எலும்புக் கூடுகளாகவும் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பான் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

முதற்கட்ட விசாரணையில், அப்படகுகள் வடக்கு கொரியாவில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.