Home வணிகம்/தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை!

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை!

609
0
SHARE
Ad

CIMB-RHB-MBSB

கோலாலம்பூர், ஜனவரி 12 – கடந்த ஆண்டு ஜூலை மாதம், மலேசிய வங்கித்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

நாட்டின் மிக முக்கிய மூன்று வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’  , ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியாக மாற்றுவதே அந்த முயற்சிகளின் இலக்காக இருந்தது.

#TamilSchoolmychoice

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியை உருவாக்கும் முயற்சி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், சில நடைமுறைச் சிக்கல்களும் முன்வைக்கப்பட்டன.

மூன்று வங்கிகளிலும் அங்கம் வகிக்கும் பொது முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்பட்டது.

எனினும் மூன்று வங்கிகளும் ஒரே இஸ்லாமிய வங்கியை சாத்தியப்படுத்துவதில் உறுதியாக இருந்தன. இந்நிலையில், விமர்சகர்களின் கூற்றுகள் உண்மையாக்கும் விதமாக மலேசியா பில்டிங் சொஸைட்டி வங்கி, ஒருங்கிணைந்த வங்கித் திட்டத்தில் இருந்து பின்வாங்கி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக எம்பிஎஸ்பி வட்டாரங்கள் கூறுயுள்ளதாவது:- “எம்பிஎஸ்பி-ல் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர் சேமநிதி வாரியம் (Employees Provident Fund (EPF) இந்த புதிய ஒருங்கிணைப்பு திட்டத்தில் பங்கேற்க தயங்குவதாக கூறப்படுகின்றது”.

“ஈபிஎப் குழுமம், மூன்று வங்கிகளிலும் பங்கு வகிக்கிறது. எம்பிஎஸ்பி-ல் 64.6 சதவீத பங்குகளையும், ஆர்எச்பி கேபிடலில் 41.5 சதவீத பங்குகளையும், சிஐஎம்பி குழுமத்தில் 14.6 சதவீத பங்குகளையும் அது கொண்டிருக்கிறது”.

“நடப்பு நிதிநிலைகளில், மூன்று வங்கிகளின் இணைப்பால், தங்கள் நிறுவனத்தின் வட்டி விகிதங்களில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஈபிஎப் குழுமம் கருதுகின்றது.”

“அதன் காரணமாக ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டை இட்டு வருகின்றது. எம்பிஎஸ்பி-ல் பெரும்பான்மையான பங்குகளை வகிப்பதால், ஈபிஎப்-ன் கருத்துகளுக்கு  எம்பிஎஸ்பி செவிசாய்த்தாக வேண்டும்” என்று கூறப்படுகின்றது.

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியை உருவாக்கி ஆசிய அளவில் மிகப் பெரும் நிதி மையமாக மாற்றலாம் என்ற கனவு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

ஒருவேளை இணைப்பு ஏற்பட்டு இருந்தால், ‘ஏசியன்’ (ASEAN) நாடுகளில், அதிகபட்ச சொத்து மதிப்பு (613.7 பில்லியன் ரிங்கெட்டுகள்) கொண்ட வங்கியாக இஸ்லாமிய வங்கி உருவெடுத்திருக்கும்.

எனினும் தற்போது வரை இந்த திட்டம் ரத்தாவது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாக வில்லை. விரைவில், எம்பிஎஸ்பி-ன் விலகல் அறிவிப்புகள்  வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.