Home வணிகம்/தொழில் நுட்பம் இண்டிகோ ஏர்லைன்ஸில் முதலீடு செய்ய கத்தார் ஏர்வேஸ் விருப்பம்!

இண்டிகோ ஏர்லைன்ஸில் முதலீடு செய்ய கத்தார் ஏர்வேஸ் விருப்பம்!

701
0
SHARE
Ad

qatarபுதுடெல்லி, ஜனவரி 12 – இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் 49 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேகர் கூறுயதாவது:- “இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 49 சதவீத பங்குகளை விற்க சம்மதம் தெரிவித்தால், அதனை உடனடியாக வாங்க கத்தார் ஏர்வேஸ் தயாராக உள்ளது”.

“இதுபோன்ற வர்த்தகம் நிகழ்ந்துவிட்டால், இந்திய மக்கள், விமான போக்குவரத்தில் எதிர்பார்க்கும் வளர்ச்சியை உடனடியாக கொடுக்க முடியும். எங்கள் நிறுவனம், இந்திய வளர்ச்சியில் முதலீடு செய்ய எப்பொழுதும் ஆர்வம் காட்டி வருகின்றது.”

#TamilSchoolmychoice

“இந்தியாவுடன் கத்தார் ஏர்வேஸ் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், விரைவில் நேர்மறையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India)  திட்டத்தில் விமான போக்குவரத்து துறைக்கும் முக்கிய இடமளிக்க வேண்டும்”.

qatar2“அது நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும். மோடியின் செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. அவர் இந்திய வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் ஒரு பிரதமராக திகழ்கிறார்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மற்ற விமான போக்குவரத்து நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோஏர் நிறுவனங்களில் கத்தார் ஏர்வேஸ் முதலீடு செய்யுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“தற்சமயம் இந்தியாவில், இண்டிகோ மட்டுமே ஆற்றலுடன் செயல்படுவதால், மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.