கோலாலம்பூர், ஜனவரி 12 – ஏசர் மலேசியா (Acer Malaysia) நிறுவனம் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், பாதிப்பிற்குள்ளான ஏசர் கருவிகளை மாற்றுவதற்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நாடு முழுவதும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளப் பேரிடருக்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஏசர் மலேசியா இந்த சலுகைகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏசர் மலேசியாவின் விற்பனை மற்றும் சேவைகள் பிரிவின் மேலாண்மை இயக்குனர் ரிக்கி டான் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏசர் கருவிகளை மாற்றுவதற்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளோம். இது பாதிக்கப்பட்டோருக்கு எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பாக இருக்கும். இந்த சலுகை குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை பகுதி மக்களை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சலுகை பிப்ரவரி மாதம் 28 வரை மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.