கோலாலம்பூர், ஜன 6- ஏசர் நிறுவனம் C720P எனும் தொடரிலக்கத்தினைக் கொண்ட கூரோம்புக் மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
299 யூரோக்கள் பெறுமதியான இக்கணினியினை முதலில் ஐரோப்பிய நாடுகளான சுவிட்ஸர்லாண்ட், ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ் நெதர்லாண்ட், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகியவற்றில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கணினிகள் 11.6 அங்குல அளவுடைய HD LED திரையினைக்கொண்டுள்ளதுடன் இன்டெல் செலரான் (Intel Celeron 2955U) செயலி, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் இவற்றின் மின்கலமானது 7 மணி நேரம் வரை தொடர்ச்சியாக தாங்கும் என்பது குறிப்பிடதக்கது.