Home நாடு அல்லாஹ் விவகாரம்: மரீனாவுக்கு பெர்காசா கண்டனம்!

அல்லாஹ் விவகாரம்: மரீனாவுக்கு பெர்காசா கண்டனம்!

442
0
SHARE
Ad

Marina-Mahathir-300-x-200கோலாலம்பூர், ஜன 6 –  ‘அல்லாஹ்’ விவகாரத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் மகள் மரீனா மகாதீர்(படம்), நேற்று கிள்ளான் தேவாலயத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் நின்றது பெர்காசா கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெர்காசா இளைஞர் பிரிவுத் தலைவர் இர்வான் ஃபாஹிமி இட்ரிஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், இருபால் உறவு ஆகியவற்றில் தேர்ந்தவர்களில் மரீனா மகாதீரும் ஒருவர் என்று பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். தனது ஆதரவாளர்களுக்கு எதற்காக அவர் நேற்று தேவாலயத்திற்கு முன் கூட வேண்டும்? அவருடைய நோக்கம் தான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“சர்ச்சையைக் கிளப்புவதற்காகவோ அல்லது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவோ தான் மரீனா இவ்வாறு ஜாயிஸ் (Jais) க்கு எதிராக அறிக்கைகள் விடுகிறார். முன்னாள் பிரதமரின் மகளான மரீனா ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு, இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். அவரின் செயலால் இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அவரின் இஸ்லாமிய நம்பிக்கை எங்கே போனது? இஸ்லாம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா?” என்றும் இர்வான் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று மரீனா மகாதீர் உட்பட சுமார் 40 பேரைக் கொண்ட குழு ‘முற்போக்கு இஸ்லாமியர்கள்’ என தங்களைக் கூறிக் கொண்டு கைகளில் பூக்களுடன் அந்த தேவாலயத்தின் முன்னால் நின்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.