Home அரசியல் அம்னோ நாட்டை அழிக்கும் கட்சியா? – நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி

அம்னோ நாட்டை அழிக்கும் கட்சியா? – நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி

798
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Sliderகோலாலம்பூர், ஜன 6 –  அல்லா விவகாரத்தில் தேவாலயத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதை துணைப்பிரதமர் முகைதீன் யாசின் ஆதரிக்கிறார். அதே வேளை சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோ நோர் ஓமார் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கட்சி செயல்படுவதை தற்காக்கிறார். அம்னோ கட்சி நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இருந்து அழிப்பதற்கு உருமாறிவிட்டதா? என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசிய பைபிள் சமூகம் (BSM) ஐ சோதனையிட்ட சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais) க்கு ஆதரவு தெரிவித்த முகைதீன் யாசின் மற்றும் நோ ஓமார் ஆகிய இருவரும் மலேசிய மக்களுக்கு மத சுதந்திரம் அளிப்பதாக கொடுத்த அரசியல் ரீதியிலான வாக்குறுதிகளும், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பைபிள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வழங்கிய 10 புள்ளிகள் கொண்ட தீர்வும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன என்றும் கிட் சியாங் குறிப்பிட்டார்.

மலேசிய பைபிள் சமூகம் (BSM) ஜாயிஸ் அமைப்பால் சோதனையிடப்பட்டு மலாய் மொழியில் இருந்த 300 பைபிள் பிரதிகளும், ஐபானில் இருந்த 10 பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கருத்துரைத்த லிம் கிட் சியாங், “கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி கூட்டரசு அரசாங்கம் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்குமிடையே கொண்டுவரப்பட்ட 10 புள்ளிகள் கொண்ட தீர்வுக்கு முரண்பாடானது. இந்தத் தீர்வு பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் பிஷப் நங் மூன் ஹியாங் மற்றும் மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்புக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வழங்கப்பட்டது” என்று கூறினார்.

#TamilSchoolmychoice