Home இந்தியா ஒபாமா பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா வரும் 300 வீரர்கள்!

ஒபாமா பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா வரும் 300 வீரர்கள்!

561
0
SHARE
Ad

obama

புதுடெல்லி, ஜனவரி 12 – இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேற்பார்வையிடவும் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த 300 அதிகாரிகள் இந்தியா வர இருக்கின்றனர்.

எதிர்வரும் 26-ம் தேதி, நடைபெற இருக்கும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ஒபாமா இந்தியாவிற்கு வருகை தர சம்மதித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை உட்பட பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில், அவரின் வருகையை யொட்டி தீவிரவாதிகள் மிகப் பெரும் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டி உள்ளதாகத் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை உறுதிப் படுத்தும் விதமாக கடந்த வாரம், குஜராத் கடல் பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முற்பட்டனர். எனினும், இந்திய கடற்படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து டெல்லி பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரும் 13-ம் தேதி அமெரிக்க சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தர இருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகுதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா வந்திருந்த ஒபாமாவின் பாதுகாப்பிற்காக 190 அமெரிக்க சிறப்பு பிரிவு காவல்துறையினர் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.