Home இந்தியா பெண்களை மதித்தால் நாடு முன்னேறும் – டெல்லியில் ஒபாமா உருக்கமான பேச்சு!

பெண்களை மதித்தால் நாடு முன்னேறும் – டெல்லியில் ஒபாமா உருக்கமான பேச்சு!

697
0
SHARE
Ad

US President Barack Obama in Indiaபுதுடெல்லி, ஜனவரி 27 – இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,பெண்களை மதித்தால் நாடு முன்னேறும் என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற இருநாட்டு உறவு குறித்த கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன், குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் என்பது எனக்கு பெருமையளிக்கிறது”.

“இந்தியா, அமெரிக்கா என்ற இரு நாடுகளும் வலிமை வாய்ந்தவை. இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் விரைவில் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்”.

#TamilSchoolmychoice

“மேலும், பெண்களை எப்படி நடத்துகிறோமோ, அதைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி இருக்கும். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் பெண்களை புறக்கணிக்க கூடாது.  வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமெரிக்காவில்தான் அதிகமாக இருக்கின்றனர்”.

“சுவாமி விவேகானந்தரை அமெரிக்கா 100 ஆண்டுகளுக்கு முன்பே வரவேற்றது, இந்து மதம், யோகாவை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தவர் விவேகானந்தர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தனிநபர் மரியாதைக்கு நாம் மதிப்பளிக்கும்போதே நாம் வலியவர் ஆகிறோம்”.

“அமெரிக்கா எனக்கு நிறைய கொடைகள் வழங்கியிருந்தாலும், என் வாழ்வில் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம்”.

“மேலும், அமெரிக்காவில் சமையல்காரரின் பேரன் ஒருவன் அதிபராக முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்றும் இந்தியாவில் டீ விற்றவர் பிரதமராகி இருக்கிறார்”.

“மேலும், அவர் கூறுகையில் “ஆயுதப் படையில் இந்திய பெண்களை பார்ப்பது மிகவும் பெருமைக்குரியது. நான் மிகவும் வலிமையான மற்றும் திறமையான பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்”.

“நான் எதேனும் தவறு செய்தால் மிச்சேல் அதனை என்னிடம் தெரிவிக்க பயப்படமாட்டார், இது அடிக்கடி நடக்கும். நாங்கள் மிகவும் அழகான இரண்டு குழந்தைகளை கொண்டுள்ளோம். நான் மிகவும் வலிமையான பெண்களால் சூழப்பட்டு உள்ளேன்”.

US President Barack Obama in India“சிலநேரங்களில் நான் என் தோல் நிறத்தின் அடிப்படையில் பாரபட்சமாக நடத்தப்பட்டேன். பெண்களை எப்படி நடத்துகிறோமோ, அதைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி இருக்கும். பெண்கள் பயமில்லாமல் பொது இடத்திற்கு செல்லும்போதே முழு வெற்றி கிடைக்கும்”.

“பெண்கள் வெற்றி பெற்றால் மட்டுமே நாடு வெற்றி பெரும். பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் இந்தியா கொடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றிபெற முடியும் என்று இந்திய பெண்கள் நிரூபித்துள்ளனர்”.

“நான் இந்தியா வந்து இறங்கியதும் இந்திய விமானப்படை பெண் அதிகாரி எனக்கு மரியாதை அளித்ததை பார்ப்பதும் மிகவும் பெருமையாக இருந்தது.  அமெரிக்கா இந்தியாவின் “சிறந்த நட்புறவு” நாடாக இருக்க முடியும்” என்று ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்”.

“மேலும் ஒபாமா பேசுகையில், “நமது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக ஈடுபட்டுள்ளோம். இந்தியா – அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும்”.

“நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த இந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்ததத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியர்களும் மிகவும் தேவைப்படும் மின்சாரம் கிடைக்கும். நோய்தடுப்பு மருந்துகளை அதிகமாக உற்பத்தி செய்ய இணைந்து செல்படுவோம்”.

“தற்போது இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர். அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என்று விரும்புகிறேன். இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நம் தேசம் வலுப்பெறும்” என்று கூறினார் ஒபாமா.