இந்திய பயணத்தின் கடைசி நாளான இன்று ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தியை சந்தித்துப் பேசுகிறார். அதையடுத்து ,டெல்லி ஃபோர்ட் கலையரங்கம் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.
அதில் ஒபாமாவின் மனைவி மிச்செலும் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஒபாமா வானொலியில் உரையாற்றுகிறார்.
முன்னதாக ஒபாமாவின் பயணத் திட்டத்தில் அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, செல்ல இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சவுதி மன்னர் அப்துல்லாவின் மறைவால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இன்று இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா செல்லும் ஒபாமா, அந்நாட்டின் புதிய மன்னரை சந்தித்து, மன்னர் அப்துல்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார்.