Home கலை உலகம் பீர் வாங்கிய நயன்தாரா: எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி!

பீர் வாங்கிய நயன்தாரா: எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி!

609
0
SHARE
Ad

nayantara_bear001சென்னை, ஜனவரி 27 – மதுக்கடையில் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்துள்ள நயன்தாராவிற்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு விடுத்துள்ளது.

சமீபத்தில், நானும் ரவுடிதான் என்ற படத்தின் படப்பிடிப்பில், நடிகை நயன்தாரா மதுக்கடையில் பீர் வாங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சியானது, இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இதற்கு இந்த மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

#TamilSchoolmychoice

“தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள்”.

“இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளது”.

“பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்”.

“இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன. எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது”.

“அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்”.