Home நாடு மீண்டும் ‘லிசார்ட் ஸ்குவாட்’ கைவரிசை! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

மீண்டும் ‘லிசார்ட் ஸ்குவாட்’ கைவரிசை! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

940
0
SHARE
Ad

LZsquadகோலாலம்பூர், ஜனவரி 27 – நேற்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ‘லிசார்ட் ஸ்குவாட்’ (Lizard Squad) கும்பல், இன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

பேஸ்புக்கையும், இன்ஸ்டாகிராமையும் சுமார் 45 நிமிடங்களுக்கு முடக்கியதோடு, பிற்பகல் 2.36 மணிக்கு தங்களது டிவிட்டர் பக்கத்தில், “Facebook, Instagram, Tinder, AIM, Hipchat #offline #LizardSquad” என்ற வாசகத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்த சம்பவத்திற்கு, ‘Lizard Squad’ கும்பல் தான் பொறுப்பு என்று முன்னணி இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. என்றாலும், பேஸ்புக் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

இந்த கும்பல் தான் கடந்த வருடம் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும் சோனி ப்ளே ஸ்டேசன் நெட்வொர்க் போன்ற முன்னணி நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.