Home இந்தியா மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி: சீனா பாரட்டு

மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி: சீனா பாரட்டு

528
0
SHARE
Ad

SRIH4

நவம்பர் 8- செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து உலகநாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி பயிற்சி மையத்தின் பேராசிரியர் யி ஹைலின் கூறுகையில், செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும்.இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டுகின்றன. விண்வெளி கனவில் இந்தியாவும் சீனாவைப்போல சிறந்து விளங்குகிறது.

மேலும் மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்றால் அது உலகுக்கே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் விண்வெளி ஆய்வில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியா, சீனாவை முந்துகிறது என்று அந்நாட்டு செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே சீன விண்வெளி ஆய்வாளரான பாங் சிகாவோ கூறுகையில், மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒரு நீண்டகால திட்டத்தின் வெறும் தொடக்கம் மட்டுமே. இதை செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் நிறுத்துவது என்பது பாரீசில் உள்ள ஒரு குழியில் டோக்கியோவில் இருந்து கோல்ப்பந்தை போடுவது போன்று கடினமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.