Home இந்தியா செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்கள் நிறைவு! மங்கள்யான் விண்கலம் சாதனை!

செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்கள் நிறைவு! மங்கள்யான் விண்கலம் சாதனை!

641
0
SHARE
Ad

Manglayaanபுதுடெல்லி, ஜனவரி 2 – செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013 நவம்பர் 5-ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் அனுப்பியது.

1350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், 66.6 கோடி கிலோமீட்டர் பயணித்து, கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி, செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

முதல் முயற்சியிலேயே இதனை வெற்றிகரமாக மேற்கொண்டு, இந்தியா உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், நேற்றுடன் செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்களை நிறைவு செய்து மங்கள்யான் சாதனை படைத்துள்ளது.

#TamilSchoolmychoice

சுமார் 6 மாத காலம் மட்டுமே இந்த விண்கலம் செவ்வாயை சுற்றி வரும் என்றும், அதிகபட்சமாக அந்த கிரகத்தை 60 முறை மங்கள்யான் சுற்றக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.