Home இந்தியா செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல் ‘மங்கள்யான்’ புதிய படம் அனுப்பியது!

செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல் ‘மங்கள்யான்’ புதிய படம் அனுப்பியது!

646
0
SHARE
Ad

mangalyanபெங்களூர், செப்டம்பர் 30 – செவ்வாய் கிரகத்தில் இருந்து ஏற்கனவே பல்வேறு படங்களை அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் இப்போது மேலும் புதியதொரு படத்தை அனுப்பி உள்ளது.

அதாவது, செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் புழுதிப்புயல் இருப்பதற்கான படத்தை எடுத்து அனுப்பி வைத்து உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 74 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி அந்த படத்தை விண்கலம் பிடித்துள்ளது.

இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வமான ‘பேஸ்புக்’ (முகநூல்) கணக்கில் இந்த தகவலை வெளியிட்டு இருப்பதுடன், மங்கள்யான் எடுத்து அனுப்பிய படத்தையும் அத்துடன் இணைத்து உள்ளது.

#TamilSchoolmychoice

அந்த விண்கலத்தில் சக்தி வாய்ந்த கேமரா, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான கருவி உள்பட 5 முக்கிய கருவிகளை சுமந்து சென்றுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அங்குள்ள கனிம வளங்கள், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளதா? அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான காரணிகள் இருக்கிறதா? என்பன போன்றவை குறித்து ஆய்வு செய்யும் பணியில் அந்த விண்கலம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.