Home உலகம் ஐரோப்பிய செயற்கைக் கோள் பூமியில் விழுந்தது!

ஐரோப்பிய செயற்கைக் கோள் பூமியில் விழுந்தது!

477
0
SHARE
Ad

European-satellite-will-fall-to-Earthகோலாலம்பூர், நவ 12 – எரிபொருள் தீர்ந்து போன நிலையில் விண்ணில் சுற்றிக்கொண்டிருந்த ஐரோப்பிய செயற்கைக் கோளான ‘விண்வெளியின் ஃபெராரி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் பூமியில் வந்து விழுந்தது.

கடந்த 25 ஆண்டுகளில் பூமியில் தானாக வந்து விழும் முதலாவது செயற்கைக் கோள் இது என்று கூறப்படுகின்றது.

கிழக்கு ஆசியா முதல் அண்டார்டிக்கா கண்டம் வரையிலான பாதையில் எங்கோ ஓரிடத்தில் இந்த செயற்கைக் கோளின் பாகங்கள் விழுந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

1 டன் எடையுள்ள இந்த செயற்கோள் கடந்த 2009 ஆம் ஆண்டு, புவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை கண்டறிவதற்காக விண்ணில் ஏவப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவே விண்வெளியில் இருந்த இந்த செயற்கைக் கோள், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி அதன் எரிபொருள் தீர்ந்து போன நிலையில் பூமியை நோக்கி இறங்கத்தொடங்கியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பூமியை நோக்கி வரத்தொடங்கிய இந்த செயற்கைக் கோளின் பாகங்கள் காற்று மண்டலத்திற்குள் நுழையும் போதே சுக்கு நூறாகச் சிதறி 25 சதவிகித பாகங்கள் மட்டுமே பூமியின் மேற்பரப்பை வந்தடைந்தன.

இதனால் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.