Home 13வது பொதுத் தேர்தல் பெர்சே 2.0 இயக்கத்தின் அடுத்தத் தலைவர் மரியா சின்!

பெர்சே 2.0 இயக்கத்தின் அடுத்தத் தலைவர் மரியா சின்!

608
0
SHARE
Ad

maria chin abdullahகோலாலம்பூர், நவ 12 – தேர்தல் மறுசீரமைப்பு இயக்கமான பெர்சே 2.0 ன் புதிய தலைவராக அவ்வியக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லா (படம்), வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் மூலம் 5 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் தலைவர் பதவிக்கு இதுவரை மரியா மட்டுமே போட்டியிட மனுத் தாக்கல் செய்திருப்பதால் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்று வெளியிடப்பட்ட அவ்வியக்கத்தின் தேர்தல் குறித்த அறிவிப்பில், இயக்கத்தின் தலைமைத்துவப் பதவிக்கு மரியா மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சைனீஸ் அசம்ளி ஹால் பொதுச் செயலாளரும், தேர்தல் குழுத் தலைவருமான ஸ்டான்லி யோங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அவ்வியக்கத்தின் மூவர் அடங்கிய தேர்தல் குழு மரியா தான் இனி தலைவர் என்பதை இன்று அறிவிக்க மறுத்துவிட்டது.

“தேர்தல் முறையாக நடைபெற்று முடிந்தவுடன் நாங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்” என்றும் ஸ்டான்லி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெர்சே இயக்கத்திற்கு நடப்புத் தலைவர்களாக வழக்கறிஞர் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் மற்றும் தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

rsih.org.