Home இந்தியா செவ்வாயை நோக்கிய பயணத்தில் சிக்கலா? மங்கல்யான் பயணத்தில் மந்தமில்லை

செவ்வாயை நோக்கிய பயணத்தில் சிக்கலா? மங்கல்யான் பயணத்தில் மந்தமில்லை

479
0
SHARE
Ad

Tamil-Daily-News_52841913701

புதுடெல்லி, நவம்பர் 12- செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி  விஞ்ஞானிகள் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளனர். அதன் வேகத்தை அதிகரிக்க இன்று அதிகாலை புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளனர்.செவ்வாயில் மனிதன் உயிர் வாழ முடியுமா என்று ஆராய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல ஆயிரம் கோடி செலவழித்து செயற்கைகோள்களை அனுப்பி வருகின்றன. இந்த முயற்சியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது.

மிகவும் மலிவாக 450 கோடி ரூபாய் செலவில் மங்கல்யான் விண்கலத்தை சொந்தமாக தயார் செய்து கடந்த 5 ம் தேதி பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் மூலம் அனுப்பி உள்ளது. மங்கல்யான் விண்கலம் மிகச்சிறியது. அதில் அதிநவீன கேமராக்கள், மனிதன் உயிர்வாழ தேவையான தன்மைகள் இருக்கிறதா என்று ஆராய முதல் கட்டமாக மீத்தேன் வாயு இருக்கிறதா  என்று ஆராய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.   பிஎஸ்எல்வி விண்வெளி மூலம் விண்வெளி வட்டப்பாதையில் செலுத்திய பின், அங்கிருந்து செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்கு மங்கல்யான் செல்ல வேண்டும். 40 கோடி கிலோமீட்டர் பயணத்தின் இறுதியில் விண்கலம், அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் வட்டப்பாதையை அடையும்.

#TamilSchoolmychoice

விண்வெளி வட்டப்பாதையில் இருந்து அவ்வப்போது, வான்கோள் வட்டப்பாதையில் சுழன்றபடியே இந்த விண்கலம் செல்லும் அப்படி செல்லும் போது அதன் வேகத்தை  அதிகரித்தால் தான் விஞ்ஞானிகள் நிர்ணயித்தபடி, அடுத்தாண்டு செப்டம்பரில் மங்கலயான் செவ்வாயை சென்றடைய முடியும்.அதன் பின் பத்து மாதங்கள் வரை அந்த விண்கலம், பூமிக்கு புகைப்படங்கள் , மித்தேன் வாயு இருக்கிறதா என்பதற்கான தடயங்கள், புள்ளிவிவரங்கள், தகவல்களை அனுப்பும்.

 இந்த ஆய்வை எட்டினாலே இந்தியா உலக அரங்கில் பெரும் பெருமையை பெற்று விடும்.இதுவரை மூன்று முறை, விண்கல பயணத்தின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சி நடந்தது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் மட்டுமில்லாமல், பெங்களூர், ஐதராபாத் உட்பட பல நகரங்களில் இருந்தும், நடுக்கடலில் கப்பல்களில் இருந்தும் மங்கல்யான் பயணத்தை கண்காணிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 நேற்று நான்காவது கட்டமாக விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சி நடந்தது. இந்த முறை ஒரு லட்சம் கிலோமீட்டர் உயரத்தில் சுழல வைக்க அதன் மோட்டார் சக்தி அதிகரிக்கப்பட்டது.

ஆனால், 78,276 கிமீ உயரத்தைதான்  எட்டியது. இது சற்று ஏமாற்றம் என்றாலும், விஞ்ஞானிகள்  அசரவில்லை.உடனே, பல நகரங்களில் உள்ள மையங்களில் இருந்து இதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிக்கை தயாரித்துள்ளனர். விண்கலம் வேகம் குறைய காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று  அதிகாலை 5 மணிக்கு மீண்டும் புதிய வகையில் முயற்சி செய்து ஒரு லட்சம் கிமீ உயரத்தை  எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை எட்டினால் போதாது. சுழல் அடிப்படையில் அடுத்தடுத்து இப்படி பல லட்சம் கிமீ உயரத்தை எட்ட  வேண்டும். அப்போது தான் செவ்வாயை குறிப்பிட்ட காலத்தில் எட்ட முடியும் என்பதால் விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் கோளாறை சரி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.இந்திய விண்வெளி கழக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘ விண்கலம் எந்த பாதிப்பும் இன்று பயணத்தை தொடர்கிறது. அது முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. வேகம் குறைந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சரியாகி விடும். இதனால் பெரிய  அளவில் எரிபொருள் வீணாகவில்லை’ என்று தெரிவித்தார்.

புவி வட்டப்பாதையில் இருந்து விண்கலம், செவ்வாய் வட்டப்பாதை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு புவி ஈர்ப்பு விசை இழுக்கும் வேகத்தை தாண்டி, மேல்நோக்கி சுழன்றபடி விண்கல மோட்டார் இயக்கப்பட வேண்டும். புவிஈர்ப்பு விசை வேகத்தை விட, இதன் வேகம் அதிகமாக இருந்தால் தான் அது இலக்கை அடைய முடியும். அதாவது, 1 லட்சம் கிமீ உயரத்தை எட்ட முடியும்.  ஆனால், புவிஈர்ப்பு விசை வேகம் அதிகமாக இருந்தால் விண்கலம் வேகம் பின்தங்கும். இலக்கை எட்ட முடியாது. செவ்வாயை அடையும் முன் இந்த புவிஈர்ப்பு பாதையை தாண்டும் வரை இந்த சிக்கல் இருக்கும். அதன் பின் தன் பயணத்தை விண்கலம் சிக்கலின்றி தொடரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.