Home அரசியல் கர்பாலின் இரட்டைப்போக்கு நிலை – மசீச சாடல்

கர்பாலின் இரட்டைப்போக்கு நிலை – மசீச சாடல்

533
0
SHARE
Ad

Loh-Seng-Kokகோலாலம்பூர், நவ 12 – இனம் மற்றும் மதம் சார்ந்த கட்சிகளின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று கூறிய விவகாரத்தில் கர்பால் சிங், தனது இரட்டைப் போக்கான நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மசீச கூறியுள்ளது.

மசீச மத்திய செயற்குழு உறுப்பினரான லோக் செங் கோ இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்பால் சிங்கின் பொறுப்பில்லாத கருத்தால் பக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பாஸ் கட்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியவுடன் கர்பால் சிங் உட்பட ஜசெக தலைவர்கள் பலர் பாஸுடன் சமாதான உடன்படிக்கைக்கு செல்கின்றனர்.” என்று குறிப்பிட்டார்.

மேலும், கர்பால் தான் பாஸ் கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று கூறவில்லை என்று தனது கருத்தில் இருந்து தடாலடியாகப் பின்வாங்கிவிட்டார் என்றும், அவருக்கு உதவும் நோக்கில் ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும், கர்பால் அவ்வாறு கூறவில்லை என்று பாஸ் கட்சியுடன் சமாதானம் செய்ய முயற்சித்ததாகவும் லோக் விமர்சித்தார்.

#TamilSchoolmychoice

கர்பால் சிங்கின் இந்த செயல் அவரது இரட்டைப் போக்கான நிலையைக் காட்டுவதாகவும் லோக் சாடினார்.

அத்துடன், “மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இங்கு நமது பின்னணியில் பல இனங்களும், மதங்களும் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். எனவே கர்பால் சிங் இது போன்று தேச ஒற்றுமையைக் கெடுக்கும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும்” என்று லோக் கூறினார்.