Home நாடு யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்: 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்: 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’

608
0
SHARE
Ad

Result-UPSR-2013புத்ராஜெயா, நவ 15 – நாடு முழுவதும் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில், 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் 8.94 விழுக்காட்டில் இருந்து 9.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று கல்வித்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அப்துல் காஃபார் மஹ்முட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 5 லட்சத்து 17,139 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதியதில் 45,054 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற வேளையில், இவ்வாண்டு தேர்வு எழுதிய 4 லட்சத்து 66,167 மாணவர்களில் 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுள்ளனர்.

மேலும், தேசிய புள்ளிகள் சதவிகிதம் (ஜிபிஎன்) அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் யூபிஎஸ்ஆர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதையும் தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக மஹ்முட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால்,  ‘சி’ நிலை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 56.94 சதவிகிதத்தில் இருந்து 56.28 சதவிகிதமாக சரிவு கண்டுள்ளது என்றும்,  ‘டி’, ‘ஈ’ நிலைத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3.36 சதவிகிதத்தில் இருந்து 3.42 சதவிகிதமாக சரிவு கண்டுள்ளது என்றும் மஹ்முட் குறிப்பிட்டார்.