கோலாலம்பூர், நவம்பர் 20- ஒப்பீட்டளவில் பெரிய திரையுடன் கூடிய திறன்பேசிகளில் அதிகளவான தகவல்கள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.5 அங்குல அளவுடையதும் அதற்கு மேற்பட்ட அளவுடைய திரையினைக் கொண்ட திறன்பேசிகளில் ஏனைய கைப்பேசிளை விடவும் 44 சதவீதம் அதிகமாக தகவல்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அகன்ற திரையினைக் கொண்ட சாதனங்களில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக 7.2ஜிபி தகவல்களும் ஏனையவற்றில் 5ஜிபி தகவல்களும் பயன்படுத்தப்படுகின்றது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பேஸ்புக், யூ டியூப், கூகுள் மேப், அமேசன், பன்டோறா ஆகியவற்றிற்கான செயலிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.