கோலாலம்பூர், நவ 21 – ஓரினப்புணர்ச்சி வழக்கு இரண்டில் அம்னோ தொடர்புடைய மூத்த வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லா சட்டக்குழுவிற்குத் தலைமையேற்கக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
யாரை வேண்டுமானாலும் அரசு தரப்பில் நியமிக்க சட்டத்துறைத் தலைவர் அப்துல் கானி படேலுக்கு அதிகாரம் உள்ளது என்று கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அரசு தரப்பு அன்வாரின் மீது தொடுக்கப்பட்டுள்ள மேல் முறையீடு மீதான விசாரணை வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வார் சார்பாக மூத்த வழக்கறிஞர் கர்பால் சிங் பிரதிநிதிப்பார். அதே நேரத்தில் அரசு தரப்பில் சபி சட்டக்குழுவிற்குத் தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.