Home நாடு “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விருந்தா?” – நஜிப் கேள்வி

“மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விருந்தா?” – நஜிப் கேள்வி

572
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், நவ 25 – தனது அதிகாரப்பூர்வ வீட்டில் மின்சார கட்டணம் அதிகமாவது குறித்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், அங்கு மின்சாரத் தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.

“ஸ்ரீ பெர்டானாவில் மின்சாரக் கட்டணம் அதிகமாகிறது என்றால் அதற்கு நான் காரணம் கிடையாது. அது என்னுடைய வீடும் அல்ல. மாநில தலைவர்கள் வருகை புரிய அங்கு ஒரு விழா நடத்தும் அறையும் உள்ளது” என்று நஜிப் நேற்று தலைநகரில் நடந்த தேசிய பொருளாதார மேம்பாடு மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், “சீனத் தலைவர் இங்கு வரும் பொழுது, நாங்கள் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தி விளக்கு பிடிக்க முடியாது. அது மிகவும் ரம்மியமாக(romantic ) இருக்காதா?” என்றும் நஜிப் நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

அந்த அதிகாரப்பூர்வ வீட்டிற்குத் தான் மூன்றாவது தலைமை விருந்தினர் “tumpang (be a guest)” என்று குறிப்பிட்ட நஜிப், “நான் அந்த வீட்டில் தூங்கவில்லை. அங்கு நீங்கள் ஒரு கருத்தரங்கு நடத்தினாலும் இலவசம் தான்” என்று தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில், பிரதமரின் ஸ்ரீ பெர்டானா அதிகாரப்பூர்வ வீட்டில் வருடத்திற்கு 2.2 மில்லியன் மின்சாரக் கட்டணம் கட்டுவது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது பிரதமர் துறை அமைச்சர் சாஹிடன் காசிம், உலகிலேயே இந்த மாநிலத் தலைமையின் அதிகாரப்பூர்வ வீட்டில் தான் குறைவான மின்கட்டணம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.